தமிழகத்தை உலுக்கிய சம்பவங்களில் ஒன்று பேராசிரியை நிர்மலா தேவியின் சம்பவம். கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் இவருடைய செயல் திடுக்கிட வைத்ததோடு, இவர் பின்னணி குறித்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது, பேராசிரியை நிர்மலா தேவி சம்பவத்தை கதைக்களமாக கொண்டு படம் ஒன்று உருவாகிறது. ‘எங்க குலசாமி’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை ஆர்யா எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்க, அறிமுக இயக்குநர் விஜயகுமார் இயக்குகிறார். கதாநாயகனாக யூடியுப் புகழ் ‘ராக் ஸ்டார்’ ராஜகுரு நடிக்கிறார்.
பேராசிரியையின் நயவஞ்சக பேச்சில் சிக்கி உயிரிழந்த தன் தங்கையின் மரணத்திற்கு நீதி கேட்டு சட்டத்தை ஹீரோ தன் கையிலெடுப்பதே கதையின் கரு. மருத்துவ கல்லூரி பின்னணியில் உருவாகும் இப்படத்திற்கு ராஜா பட்டாசார்ஜீ ஒளிப்பதிவு செய்ய, சாம் டிராஜ் இசையமைக்கிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள ‘எங்க குலசாமி’ ஏப்ரல் இறுதியில் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...
நானி -ஸ்ரீகாந்த் ஒடெலா -சுதாகர் செருகுரி - எஸ்...