ஈவோக் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ.மதிவாணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘படைவீரன்’ மணிரத்னத்தின் சிஷ்யர் தனா இயக்கியுள்ள இப்படத்தில் பிரபல பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் ஹீரோவாக நடிக்க, படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் பாரதிராஜா நடித்துள்ளார். நாயகியாக அம்ரிதா ஐயர் அறிமுகமாகியுள்ள இதில், இயக்குநர் மனோஜ் குமார், இயக்குநர் கவிதா பாரதி, நிதிஷ் வீரா, கலையரசன், சுரேஷ் ஏகா, சாரா ஜோசப், கன்யா பாரதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
‘குரங்கு பொம்மை’ படத்தில் தனது நடிப்பு மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த பாரதிராஜா, தனது முழு நடிப்பையும் ‘படைவீரன்’ படத்தில் தான் காட்டியிருக்கிறேன், என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் இப்படத்தை பார்த்த நடிகர் தனுஷ், படத்தை பாராட்டியதோடு, இந்த வெற்றி படத்தில் தன்னுடைய பங்களிப்பு இருக்க வேண்டுமென விரும்பியதோடு, ஒரு பாடலை பாடி தருவதாகவும் கூறினாராம்.
உடனே இயக்குநர் தனா, இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா, பாடலாசிரியர் பிரியன், விஜய் யேசுதாஸ் ஆகியோர் அமர்ந்து, புது டியூன் ஒன்றை போட்டு பாடலை ரெடி பண்ணீட்டங்களாம். பிறகு, தனுஷ் அந்த பாடலை தனது குரலின் மூலம் துள்ளல் பாடலாக்கிவிட்டாராம்.
அந்த பாடலின் முதல் வரி, “லோக்கல் சரக்கா...பாரின் சரக்கா....” என்பது தானாம். இந்த பாடலை விரைவில் படமாக்க உள்ளார்களாம்.
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...