பஞ்சாப் மாநிலத்தில், மார்ச் 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நடைபெற்ற 24 வது தேசிய ஃபெடரேஷன் கோப்பை தடகளப் போட்டியில், தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற திருச்சியை சேர்ந்த தனலெட்சுமி 100 மீட்டர் ஓட்டப்பயந்த போட்டியில் தங்கப் பதக்கத்தையும், 200 மீட்டர் போட்டியில், 23.26 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். இதன் மூலம், 23 ஆண்டுகளுக்கு முன் பி.டி உஷா நிகழ்த்திய சாதனையை தனலெட்சுமி முறியடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
அதேபோல், 100 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியில் இலக்கிய தாசன் வெள்ளிப் பதக்கத்தையும், 200 மீட்டர் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் வென்றார்.
இந்த நிலையில், சென்னை மாவட்ட முதுநிலை தடகள சங்கத்தின் தலைவரும், திரைப்பட தயாரிப்பாளருமான ரெட் ஜெயிண்ட் மூவிஸ் செண்பகமூர்த்தி, சாதனை படைத்த விளையாட்டு வீரர்கள் இருவரையும் பாராட்டி பரிசளித்தார்.
ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...
இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...
‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...