காதலித்து திருமணம் செய்துக் கொள்ளும் கோலிவுட் நடிகர், நடிகைகள் சில மாதங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்துவிடுவது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில், நடிகைகள் அமலா பால், சோனியா அகர்வால் போன்ற பல நடிகைகள் இயக்குநர்களை காதலித்து திருமணம் செய்துக் கொண்டு, சில மாதங்களிலேயே பிரிந்துவிட்டனர்.
இவர்களில் அமலா பால், விவாகரத்து வாங்கிய பிறகு நடிப்பில் கவனம் செலுத்தியதோடு, சில திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்ததோடு, பொருளாதார ரீதியாகவும் சற்று முன்னேற்றம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, சொந்தமாக திரைப்படம் தயாரிக்கும் அளவுக்கு அவர் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்.
இவரைப் போன்று தான் நடிகை சோனியா அகர்வாலும், இயக்குநர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டு, சில மாதங்களிலேயே அவரை பிரிந்து விட்டார். செல்வராகவனிடம் விவாகரத்து பெற்ற நடிகை சோனியா அகர்வாலுக்கு ரூ.2 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தற்போது சில திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வரும் சோனியா அகர்வால், பொருளாதார ரீதியாக பெரும் பிரச்சனையில் சிக்கியுள்ளாராம். மேலும், சொந்தமாக நிறுவனம் ஒன்றையும் தொடங்கியவர் அதிலும் பெரும் சரிவை சந்தித்ததால், பொருளாதார ரீதியாக ரொம்பவே கஷ்ட்டப்படுகிறாராம்.
இதனால், அவருடைய நண்பர்கள் அவரை மறுமணம் செய்துக் கொள்ளுமாறு வற்புறுத்த அவரை மறுமணம் செய்துக் கொண்டு அவருக்கு உதவ பல தொழிலதிபர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்களாம். ஆனால், முதல் திருமணத்தினால் மனத ரீதியாக பாதிக்கப்பட்டதால், மறுமணம் குறித்து யோசித்து கூட பார்க்க முடியவில்லை, என்று நடிகை சோனியா அகர்வால் கூறுவதால், அவருக்கு கைகொடுக்க நினைக்கும் தொழிலதிபர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளார்களாம்.
ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...
இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...
‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...