தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மக்கள் காலை 6 மணிக்கே வாக்குச்சாவாடிகளில் குவிய தொடங்கினர். தமிழகம் முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், நடிகர் விஜய் வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்தது, பெரும் விவாத பொருளாகியுள்ளது. அதாவது, பெரோல் விலை உயர்வால் பாதிப்புக்குள்ளான மக்களின் அவலநிலை சுட்டிக்காட்டும் வகையில் தான், நடிகர் விஜய் ஓட்டு போட சைக்கிளில் வந்ததாக கூறப்படுகிறது.
இப்படி ஒரு சர்ச்சை எழுந்ததால், ஓட்டு போட சைக்கிளில் வந்த விஜய், திரும்பி செல்லும் போது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல், விஜய் கருப்பு மற்றும் சிவப்பு நிறம் கொண்ட சைக்கிளில் வந்ததால், அவர் தனது ரசிகர்களுக்கு மறைமுகமாக எதையோ சொல்ல வருகிறார், என்ற கருத்து சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...
சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள "தருணம்" திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...