தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வரும் நிலையில், சிலர் காலை 6 மணிக்கே வாக்குச்சாவடிக்கு வந்து காத்திருந்தனர். அதன்படி, நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், முதல் நபராக வாக்களித்துள்ளார்.
திரையுலகினர் பலர் படப்பிடிப்புகளை ரத்து செய்துவிட்டதோடு, வெளியூரில் இருந்தவர்கள் வாக்களிப்பதற்காக அவர் அவர் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். அந்த வகையில், நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், சினிமா பணிகளுக்காக சென்னையில் தங்கியிருந்தவர், வாக்களிப்பதற்காக தஞ்சைக்கு புறப்பட்டார்.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள ராஜா சரபோஜி அரசினர் கலை கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் முதல் நபராக நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் வாக்களித்தார்.
திரைப்பட தயாரிப்பு மற்றும் நடிப்பு என சினிமாவில் மட்டும் இன்றி தொழில்துறை மற்றும் சமூக பணிகளில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், வாக்களிக்கும் கடமையை தவறாமல் செய்ய வேண்டும், என்பதற்காக தனது சொந்த ஊருக்கு வந்து முதல் நபராக வாக்களித்த நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரை, தஞ்சை மக்கள் மட்டும் இன்றி திரயுலகினரும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
‘களவாணி 2’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், தொடர்ந்து ‘டேனி’, ‘க.ப.ரணசிங்கம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது சரவண சுப்பையா இயக்கத்தில் உருவாகி விரைவில் வெளியாக உள்ள ‘மீண்டும்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பதோடு, எழில், சற்குணம் உள்ளிட்ட முன்னணி இயக்குநர்களின் படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருவதோடு, திரைப்பட தயாரிப்புகளிலும் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...
சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள "தருணம்" திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...