Latest News :

பிக் பாஸ் முகேன் ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
Wednesday April-07 2021

பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்த முகேன் ஹீரோவாக அறிமுகமாக உள்ள படம் ‘வேலன்’. ஸ்கை பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் கலைமகன் முபாரக் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் கவின் இயக்குகிறார். தற்போது இப்படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்து பின்னணி வேலைகள் தொடங்கியுள்ளது.

 

சமீபத்தில் ‘வேலன்’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திட்டமிட்ட காலக்கட்டத்தில் படப்பிடிப்பு முடித்து, பின்னணி வேலைகளில் ஈடுபட்டிருக்கும் படக்குழுவினர், படம் உருவான விதத்தால் உற்சாகத்தில் இருப்பதோடு, மிகச்சரியான விழாக்காலத்தில் படத்தின் மோஷன் போஸ்டர், இசை, டிரைலர் மற்றும் திரையரங்கு வெளியீடு தேதிகள் குறித்த தகவல்களை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

 

பிக் பாஸ் முகேன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் மீனாக்‌ஷி ஹீரோயினாக நடித்திருக்கிறார். இவர்களுடன் பிரபு, சூரி, மரியா, தம்பி ராமையா, ஹரீஷ் பேரடி, ஸ்ரீரஞ்சனி, சுஜாதா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

Velan Dubbing Work

 

கோபி சுந்தர் இசையமைக்கும் இப்படத்திற்கு கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பாலசுப்பிரமணியன் கலையை நிர்மாணிக்க, கே.சரத்குமார் படத்தொகுப்பு செய்கிறார். மகேஷ் மேத்யூ சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, தினேஷ் நடனம் அமைக்க, மதன் கார்கி, ஏகாதசி, வேல்முருகன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். எம்.சந்திரன், சவரிமுத்து, கவின் ஆகியோர் வசனம் எழுதியுள்ளனர்.

 

இப்படத்தை எழுதி இயக்கும் கவின், இயக்குநர் சிவாவிடம் உதவியாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

7444

ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் வெளியான ‘சங்கராந்தி வஸ்துனம்’!
Sunday March-02 2025

ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...

விஷ்ணு மஞ்சுவின் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் வெளியானது!
Sunday March-02 2025

இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...

இயக்குநர் மோகன்.ஜி - ரிச்சர்ட் ரிஷி கூட்டணியில் உருவாகும் ‘திரெளபதி 2’!
Sunday March-02 2025

‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...

Recent Gallery