தரமான திரைப்படங்களை தயாரித்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்துடன், நடிகர் கார்த்தி இணைந்தாலே அப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது ‘சுல்தான்’ திரைப்படம்.
கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க, வில்லனாக ‘கே.ஜி.எப்’ புகழ் ராமசந்திர ராஜு நடித்திருக்கும் இப்படத்தில் லால், நெப்போலியன், யோகி பாபு, பொன்வண்ணன், மயில்சாமி, முன்னாள் மிஸ்டர் இந்தியா காமராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் ரவுடி கூட்டமாக சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் என மிகப்பெரிய நட்சத்திரக் கூட்டம் நடித்திருக்கும் இப்படம் கடந்த 2 ஆம் தேதி வெளியாக பெரியவர்கள் சிறியவர்கள் என அனைவரையும் கவர்ந்துள்ளது.
ஆக்ஷன், காதல், காமெடி, செண்டிமெண்ட் என மாஸான கமர்ஷியல் படமாக உருவாகியிருப்பதோடு, விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றியும் பேசியிருக்கும் இப்படம் பெண்களையும், சிறுவர்களையும் வெகுவாக கவர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், ‘சுல்தான்’ வெற்றியை கொண்டாடும் விதமான நேற்று படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய நடிகர் கார்த்தி, ”’சுல்தான்’ படத்தின் கதையையும், 7 அடிக்கு மேல் உயரம் கொண்டவரும், 3 அடி உயரம் கொண்டவரும் எனக்கு பாதுகாவலர்களாக இருப்பார்கள், என்ற கதாப்பாத்திர அமைப்பையும் கேட்டவுடன் நான் 10 வயது சிறுவனாகி விட்டேன். அப்போது இது ஒரு பேண்டஸி படமாக எனக்கு தோன்றியது. சிறு வயதில் ஜெயின் ரோபோட் தொடரை பார்க்கும் போது எப்படிப்பட்ட உற்சாகம் இருக்குமோ, அதுபோன்ற உற்சாகம் எனக்கு தோன்றியது. அப்போதே இந்த படத்தை செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன்.
பெரிய நட்சத்திர பட்டாளம் இருப்பதால், பட்ஜெட்டும் பெரிதாகும் என்று நான் யோசித்தாலும், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு நம்பிக்கையுடன் பரவாயில்லை பண்ணலாம், என்று முன் வந்தார்.
படம் வெற்றி பெற்றுள்ளது. பெண்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் படத்தை கொண்டாடுகிறார்கள். கமர்ஷியல் படம் என்றால் சிறு சிறு குறைகள் இருக்கும். அதை சில விமர்சகர்கள் சுட்டிக்காட்டியிருப்பதையும் நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், படம் ரிலீஸுக்கு முன்பாகவே இது ஒரு ஜாலியான படம், இரண்டு மணி நேரம் போவதே தெரியாத ஒரு படமாக இருக்கும் என்று சொன்னோம், அதே உணர்வு தான் ரசிகர்களுக்கும் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
படத்தில் நடித்த அனைவருக்கும் ‘சுல்தான்’ ஒரு அடையாளத்தை கொடுத்துள்ளது. அவர்களுக்கு இதன் மூலம் பல வாய்ப்புகள் கிடைத்திருப்பதாக கூறுகிறார்கள், அதுவும் மகிழ்ச்சி. பொன்வண்ணன் சார், எனக்கு மாமனாராக நடித்தால் அந்த படம் பெரிய வெற்றி பெறும். ‘பரூத்திவீரன்’, ‘கடைக்குட்டி சிங்கம்’ வரிசையில் தற்போது ‘சுல்தான்’ படத்திலும் அவர் எனக்கு மாமனாராக நடித்திருக்கிறார்.
இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன், லால் சார் கண்டிப்பாக இப்படத்தில் நடிக்க வேண்டும் என்றார். அவர் கூறியதைப் போல லால் சார் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.
இப்படம் திரையரங்கிற்கான படம், அதற்காக 3 வருடங்கள் பொறுமையாக இருந்து வெளியிட்ட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிற்கு நன்றி. ஓடிடியில் இப்படத்தை வெளியிட்டிருந்தால் இந்த அளவு பாராட்டுக்கள் வந்திருக்காது.
அதேபோல், பாதுகாப்போடு ஒரு திரைப்படத்தை திரையரங்கில் பார்க்க முடியும் என்ற நம்பிக்கையும் மக்களிடத்தில் வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
அனைவர் பற்றியும் பேசிவிட்டு கதாநாயகி ராஷ்மிகாவைப் பற்றி பேசவில்லையென்றால் எப்படி? இப்படத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து சிறப்பாக நடித்திருந்தார். அவருக்கு இந்த நேரத்தில் மிக்க நன்றி.” என்றார்.
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...
சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள "தருணம்" திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...