Latest News :

திரையரங்குகளில் நாளை முதல் ‘கர்ணன்’!
Thursday April-08 2021

இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர் தனுஷ், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ஆகியோரது கூட்டணியில் உருவாகி மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘கர்ணன்’ நாளை (ஏப்.9) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

 

’கர்ணன்’ படத்தின் போஸ்டர், ஒவ்வொன்றாக வெளியான பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், சமீபத்தில் வெளியான படத்தின் டீசர், படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரிக்க செய்ததோடு, ரசிகர்கள் மட்டும் இன்றி, திரையுலகினரிடமும் படத்தை பார்க்க வேண்டும், என்ற ஆர்வத்தை தூண்டியுள்ளது.

 

மேலும், கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு திரையரங்குகளுக்கு மக்களின் கூட்டத்தை வரவைத்த விஜயின் ‘மாஸ்டர்’ படத்தைப் போல தனுஷின் ‘கர்ணன்’ படமும் திரையரங்குகளுக்கு அனைத்து தரப்பினரையும் அழைத்து வரும் என்று திரையரங்க உரிமையாளர்கள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். காரணம், நேற்று தொடங்கிய ‘கர்ணன்’ படத்தின் டிக்கெட் முன் பதிவு தானாம்.

 

Related News

7448

ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் வெளியான ‘சங்கராந்தி வஸ்துனம்’!
Sunday March-02 2025

ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...

விஷ்ணு மஞ்சுவின் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் வெளியானது!
Sunday March-02 2025

இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...

இயக்குநர் மோகன்.ஜி - ரிச்சர்ட் ரிஷி கூட்டணியில் உருவாகும் ‘திரெளபதி 2’!
Sunday March-02 2025

‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...

Recent Gallery