தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடிக்க தொடங்கியுள்ளார்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வெற்றி கொடுத்த அவருக்கு தொடர்ந்து பல கதாநாயகியை மையப்படுத்திய கதைகள் அமைந்து வருகின்றது. அதன்படி, மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் தமிழ் ரீமேக்கிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார்.
ஆர்.கண்ணன் இயக்கி தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷுக்கு திடீர் திருமணம் நடந்ததாக தகவல் வெளியானதோடு, அவருக்கு திருமணம் நடப்பது போன்ற புகைப்படம் ஒன்றும் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஆனால், ஐஸ்வர்யா ராஜேஷின் அந்த திருமண புகைப்படம் ஒரு திரைப்படத்தின் புகைப்படம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ தமிழ் ரீமேக்கின் படப்பிடிப்பு புகைப்படமாம் அது. அப்படத்தின் ஹீரோ ராகுலுக்கும், ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் திருமணம் நடக்கும் காட்சி படமாக்கப்பட்டது. அந்த புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில் நடிகர் ராகுல் அடையாளமே தெரியாமல் இருப்பதால், ஐஸ்வர்யா ராஜேஷுக்கு திடீரென்று திருமணம் நடந்து விட்டதாக நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் கொள்ளுத்தி போட, அதுவே தற்போது கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது.
ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...
இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...
‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...