பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஓவியா, அந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினாலும், அவருக்கு ஏகப்பட்ட திரைப்படங்களின் வாய்ப்பு வருவதோடு, பல விளம்பர படங்களின் வாய்ப்புகளும் வருகிறதாம். ஆனால், வரும் வாய்ப்புகள் அனைத்தையும் ஏற்காமல், தான் கேற்கும் சம்பளம் மற்றும் நிறுவனத்தை பார்த்தே தேர்வு செய்கிறாராம்.
அதன்படி, சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் நடித்துள்ள ஓவியாவுக்கு பெரிய தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாம். புதிய சரவணா ஸ்டோர்ஸ் திறப்பு விழாவுக்கான விளம்பர படம் மட்டும் இன்றி, அதன் உரிமையாளருடன் சேர்ந்து நடனம் ஆடுவது போல ஒரு விளம்பர படத்திலும் ஓவியா நடித்துள்ளாராம். இதற்கு எல்லாம் சேர்த்து அவருக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றிருந்தாலே ஓவியாவுக்கு ரூ.50 லட்சம் மட்டுமே கிடைத்திருக்கும். ஆனால், சில நாட்கள் மட்டுமே நடித்த விளம்பர படத்திற்கு ரூ.85 லட்சம் சம்பளம் என்றதுமே சில நடிகைகள் ஓவியாவை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்களாம்.
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...