கடந்த 2015 ஆம் ஆண்டு சிம்பு பீப் பாடல் ஒன்று வெளியிட்டு பெரும் சர்ச்சையில் சிக்கி வழக்குகளையும் எதிர்கொண்டார். அதே சமயம், அந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றது.
தற்போது அப்படி ஒரு பாடலாக இல்லை என்றாலும், பாடலின் ஆரம்பத்தில் சிம்புவின் பீப் பாடல் போன்று அதிர்ச்சியை கொடுத்துவிட்டு, பிறகு அந்த அதிர்ச்சி வரிகளுக்கான விளக்கத்தை கொடுத்து ஆறுதல் படுத்தியிருக்கிறது. “காட்டுடி பாக்குறேன்...” என்று தொடங்கும் இசை ஆல்பம் வீடியோ பாடல்.
”ஹலோ எக்ஸ்கியூஸ் மீ” என்று நாகரீகமான வார்த்தைகளாலும் அழைக்கப்படும் அப்பாடல் இளசுகளிடம் மாபெரும் மவுசு பெற்ற பாடலாக உலா வந்துக் கொண்டிருக்கிறது.
பத்திரிகையாளரும், திரைப்பட தயாரிப்பாளருமான மதி ஒளி ராஜா வரிகள் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் இந்த பாடலை பிரபல பின்னணி பாடகர் அந்தோணி தாசன் பாடியிருக்கிறார். பிரபல நடன இயக்குநர் சாண்டி மற்றும் அவரது குழுவினர் நடனம் அமைத்து, பாடல் காட்சியில் நடித்துள்ளனர்.
இளமை துள்ளும் காதல் பாடலாக உருவாகியுள்ள ”ஹலோ எக்ஸ்கியூஸ் மீ...” பாடல் ‘எம்.எக்ஸ் பிளேயர்’ (MXPLAYER) ஒடிடி தளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.
இதோ அந்த பாடல்,
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...
சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள "தருணம்" திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...