மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘கர்ணன்’ மிகப்பெரிய எதிர்ப்பார்ப்போடு நாளை (ஏப்.09) உலகம் முழுவதும் வெளியாகிறது. இதற்கிடையே, கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் தமிழக அரசு ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதில் ஒன்றாக, திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே செயல்பட வேண்டும், என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ‘கர்ணன்’ படத்தின் வெளியீடு தள்ளிப் போகும் என்ற தகவல் பரவ தொடங்கிய நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு.
அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சொன்னது சொன்னபடி கர்ணன் திரைப்படம் நாளை திரைக்கு வரும், அரசின் அறிவிப்பின் படி, 50% இருக்கைகளோடு தக்க பாதுகாப்புடன் திரையிடப்படும், கர்ணன் திரைப்படத்திற்கு உங்கள் பேராதரவை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன், என்று தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவின் அறிவிப்பால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பதோடு, கடல் நடுவே ‘கர்ணன்’ படத்தின் பேனர் வைப்பது, திரையரங்குகளில் 50 அடிக்கு மேல் உயரமுள்ள பேனர் வைப்பது என கொண்டாடி வருகிறார்கள்.
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...
சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள "தருணம்" திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...