பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றதோடு, அந்த நிகழ்ச்சியில் சமையல் கலைஞர்களாகவும், கோமாளிகளாகவும் பங்குபெற்றவர்களும் மக்களிடம் பிரபலமாகியுள்ளனர்.
அந்த வகையில், சில திரைப்படங்களிலும், விளம்பரப் படங்களிலும் நடித்து வந்த அஸ்வின், என்பவர் குக் வித் கோமாளி மூலம் பெரிய அளவில் பிரபலம் அடைந்திருப்பதோடு, பெண் ரசிகர்களையும் அதிகம் பெற்றுள்ளார்.
தற்போது ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி 2’ இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப் போட்டியில், அஸ்வின், பாபா பாஸ்கர், கனி, ஷகீலா, பவித்ரா உள்ளிட்டோர் தேர்வாகியிருந்தாலும், அஸ்வின் தான் வெற்றி பெறுவார், என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். மேலும், ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் பிக் பாஸ் நிகழ்ச்சியை போன்று, குக் வித் கோமாளி நிகழ்ச்சியையும் தொடர்ந்து பல சீசன்களாக தயாரிக்க சேனல் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதிலும், அடுத்த சீசனிலும் அஸ்வினை பங்கேற்க வைப்பதற்கான பேச்சு வார்த்தையும் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், ‘குக் வித் கோமாளி’ சீசன் 3-யில் அஸ்வின் பங்கேற்கப் போவதில்லை என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. அவர் அந்த நிகழ்ச்சிக்கு குட்பை சொல்லிவிட்டாராம். மேலும், இனி எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.
காரணம், அஸ்வினுக்கு திரைப்பட வாய்ப்புகள் பல தேடி வர தொடங்கியுள்ளது. மேலும், சோனி மியூசிக் நிறுவனம் தயாரித்த வீடியோ இசை ஆல்பம் ஒன்றில் அஸ்வின் நடிக்க, அந்த பாடல் பட்டிதொட்டியெல்லாம் பரவியதால், அவரை வைத்து மேலும் பல இசை ஆல்பங்களை தயாரிக்க, சில திரைப்பட நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகிறது.
தற்போது பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ், அஸ்வினை வைத்து ‘கிரிமினல் கிரஸ்’ என்ற வீடியோ இசை ஆல்பத்தை தயாரிக்கிறார். இந்த ஆல்பத்தை தொடர்ந்து ஐசரி கணேஷன் தயாரிக்கும் திரைப்படத்தில் அஸ்வின் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...
சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள "தருணம்" திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...