கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியான ‘கர்ணன்’ படத்திற்கு மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
கொரோனா பரவலால் மக்கள் திரையரங்குகளுக்கு வருவார்களா? என்ற கேள்வியை உடைத்தெரிந்து முதல் நாளிலேயே தமிழகம் முழுவதும் சுமார் ரூ.10 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ‘கர்ணன்’ படக்குழு மட்டும் இன்றி தமிழ் திரையுலகமே உற்சாகமடைந்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு விதித்த கட்டுப்பாட்டினால் நேற்று முதல் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும். இது திரையுலகினரிடம் சற்று கலக்கத்தை ஏற்படுத்தினாலும், கர்ணன் படத்தின் முதல் நாள் வசூலையும், படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பையும் வைத்து பார்க்கும் போது 50 சதவீத இருக்கைகளும் நிரம்பி விடும் என்பதால், திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.
கொரோனா பிரச்சனையால் நீண்ட காலமாக பிரச்சனையில் சிக்கி தவித்த திரையுலகுக்கு விஜயின் ‘மாஸ்டர்’ பெரும் நம்பிக்கை கொடுத்த நிலையில், தற்போது ‘கர்ணன்’ திரைப்படம் புதிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.
ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...
இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...
‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...