கார்த்தி, ராஷ்மிகா, லால் ஆகியோரது நடிப்பில், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவான ‘சுல்தான்’ திரைப்படம் ஏப்ரல் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு மிகப்பெரிய பொருட்ச்செலவில் தயாரித்த இப்படம், தேர்தல் பரபரப்புக்கிடையே வெளியானாலும், மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழகம் சுமார் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான ‘சுல்தான்’ திரைப்படத்திற்கு நல்ல வசூல் கிடைத்து வருவதாக திரையரங்க உரிமையாளர்கள் கூறி வந்தனர்.
இதற்கிடையே, தனுஷின் ‘கர்ணன்’ படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியானது. இதனால் சுல்தான் படத்தை எடுத்துவிட்டு கர்ணன் படத்திற்கு திரையரங்கங்கள் ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், விசாரித்ததில் அப்படி எதுவும் நடக்கவில்லையாம்.
இரண்டாவது வாரத்திலும் நல்ல வசூலை பெற்று வருவதால், தற்போதும் சுமார் 350-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் சுல்தான் ஓடிக்கொண்டிருப்பதோடு, இரண்டாவது வாரத்திலும் வசூல் குறையவில்லை, என்றும் கூறப்படுகிறது.
கொரோனா மீண்டும் பரவுவதாலும், ஒடிடிக்கும் பழக்கப்பட்டு விட்டதாலும், இனி திரையரங்குகளுக்கு மக்கள் வருவார்களா? என்ற கேள்வியை ‘சுல்தான்’ மற்றும் ‘கர்ணன்’ ஆகிய இரண்டு படங்களும் உடைத்தெறிந்து வெற்றிவாகை சூடியிருப்பது, அப்படக்குழுவினருக்கு மட்டும் இன்றி ஒட்டு மொத்த தமிழ்த் திரையுலகிற்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...
இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...
‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...