உலக அளவில் புகழ் பெற்ற மருத்துவரான டாக்டர்.ஷீபா, கோவையில் குழந்தைகளுக்கான பல் மருத்துவமனையை நடத்தி வருகிறார். வீ லிட்டில் (We Little) என்ற இந்த மருத்துவமயில் சிகிச்சை மேற்கொள்ள உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் வந்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கான பயண வசதிக்காக டாக்டர்.ஷீபா, தற்போது வீ லிட்டில் மருத்துவமனையை சென்னையில் தொடங்கியுள்ளார்.
சென்னை, மயிலாப்பூர், ஆர்.கே.சாலையில் தொடங்கப்பட்டுள்ள வீ லிட்டில் மருத்துவமனையின் துவக்க விழாவில் நடிகைகள் விஜயலட்சுமி, நிஷா ஆகியோர் கலந்துக் கொண்டு குத்துவிளக்கு ஏற்று மருத்துவமனையின் செயல்பாடுகளை துவக்கி வைத்தார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய டாக்டர்.ஷீபா, குழந்தைகளுக்கான பல் மருத்துவம் பற்றி மட்டும் இன்றி, குறுகலான் பற்கள், மற்றும் சரியான முறையில் பற்கள் வளராமல் இருப்பதற்கு பின்னணி பல குறைபாடுகள் இருப்பதாக கூறியதோடு, தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்கும் முறையையும் விவரித்தார்.
அவர் கூறிய தகவல்களால் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்ட நடிகைகள் வரலட்சுமி மற்றும் நிஷா அதிர்ச்சியடைந்ததோடு, தாய்ப்பால் கொடுக்கும் முறை பற்றிய தங்களது அனுபவங்களை அவர்கள் பகிர்ந்துக் கொண்டனர்.
இதோ அந்த வீடியோ,
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...
சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள "தருணம்" திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...