திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் சிம்புவின் நடவடிக்கைகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருப்பதாக, அவருக்கு நெருக்கமானவர்க சிலர் கூறி வருகிறார்கள். குறிப்பாக ஆன்மீகத்தில் அதிக ஈடுபட்டு கொண்டிருக்கும் சிம்பு, முன்பை போல் பார்ட்டி உள்ளிட்ட எந்த விஷயத்திற்காகவும் வெளியே செல்வதில்லை என்றும், படப்பிடிப்பு முடிந்ததும் நேராக வீடு வந்து சேருபவர், அமைதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சிம்புவை பற்றி இப்படி ஒரு தகவல் பரவிக் கொண்டிருக்கும் நிலையில், அதிர்ச்சியளிக்கும் வேறு ஒரு தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது, காதல் தோல்விகளால் இனி காதலே வேண்டாம், என்று கூறி வந்த சிம்பு, இளம் நடிகை ஒருவருடன் காதல் வயப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
சிம்பு நடித்துக் கொண்டிருக்கும் படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் அந்த வாரிசு நடிகையுடன் சிம்பு நெருக்கம் காட்டுவதாகவும், தனது வீட்டுக்கே அந்த நடிகையை சிம்பு அழைத்து வந்து அன்பு காட்டுவதாகவும் கூறப்படுகிறது.
சிம்புக்கு திருமணமாகவில்லையே, என்று அவரது பெற்றோர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், சிம்புவின் புதிய காதல் விவகாரம் கசிந்திருப்பது கோலிவுட்டில் சற்று சலசலைப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...
இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...
‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...