’வெண்ணிலா கபடிகுழு’ திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஷ்ணு விஷால், தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து வருவதோடு, சொந்தமாக திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார்.
இதற்கிடையே, தனது காதல் மனைவி ரஜினியை விவாகரத்து செய்த விஷ்ணு விஷால், பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் நெருக்கமாக பழகி வந்ததோடு, அவரை விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார்.
இந்த நிலையில், விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா திருமணம் வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. தற்போது திருமண அழைப்பிதழ் வழங்கும் பணியில் நடிகர் விஷ்ணு விஷால் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் விஷ்ணு விஷாலை போல விளையாட்டு வீராங்கனை ஜுவாலா கட்டாவும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...
இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...
‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...