சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாநாடு’ படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருவதும், இப்படம் பல பிரச்சனைகளை கடந்து படப்பிடிப்பு தொடங்கப்பட்டதும் அனைவரும் அறிந்தது தான். அதேபோல், இப்படம் குறித்து அவ்வபோது சில சர்ச்சையான தகவல்கள் வெளியாகி கொண்டிருப்பதும், அதற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி விளக்கம் அளிப்பதும் வழக்கமாக நடந்துக் கொண்டிருக்கிறது.
அதன்படி, தற்போது ஒரு சர்ச்சையான சம்பவம் நடந்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னையில் நடைபெற்று வந்த ‘மாநாடு’ படப்பிடிப்பு முடிந்த நிலையில், அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு மாலத்தீவில் நடத்த இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குநர் வெங்கட் பிரபு இல்லாமல், ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதனுடன் லொக்கேஷன் பார்ப்பதற்காக மாலத்தீவுக்கு சென்றுள்ளார். அவர் ஒளிப்பதிவாளருடன் மாலத்தீவுக்கு செல்லும் புகைப்படம் ஒன்றை தனது வாட்ஸ்-அப் டிபியில் வைத்திருந்தார்.
ஒரு படத்திற்கான லொக்கேஷனை இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் இணைந்து தேர்வு செய்வது தான் வழக்கம். ஆனால், இங்கு அப்படி இல்லாமல், படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு இல்லாமல் ஒளிப்பதிவாளருடன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சென்றிருப்பதால், ‘மாநாடு’ படத்தில் ஏதோ விவகாரம் தொடர்ந்துக் கொண்டு இருக்குமோ, என்ற சந்தேகம் எழுகிறது.
அதே சமயம், சுரேஷ் காமாட்சி அடுத்ததாக இயக்குநர் ராம் இயக்கத்தில் ஒரு படம் தயாரிக்க இருக்கிறார். அந்த படத்திற்காக லொக்கேஷன் பார்க்க சென்றிருக்கலாம், என்றும் கூறப்படுகிறது. அப்படி இருந்தாலும், இயக்குநர் ராமும் தானே சென்றிருக்க வேண்டும்.
ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...
இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...
‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...