Latest News :

ராணுவ வீரர் இயக்கும் ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’
Tuesday September-26 2017

இந்திய ராணுவத்தில் 6 வருடங்கள் சிறப்பு சேவையில் பணிபுரிந்த எம்.ஏ.பாலா என்பவர் இயக்கும் படம் ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்'. டிப்ளமோ இன் பிலிம் மேக்கிங் படித்துவிட்டு பல குறும்படங்களையும், டெலி பிலிம்களையும் இவர் இயக்கியுள்ளார்.

 

ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினைகள் இருக்குமென எப்படி நியூட்டனின் விதி சொல்கிறதோ, அதே மாதிரி, உலகின் ஏதோ ஒரு மூலையில் பட்டாம்பூச்சி சந்தோசமாய் சிறகடித்து சுற்றித் திரிவதற்கும், இன்னொரு பக்கம் சம்பந்தமேயில்லாமல் எரிமலைகள் வெடித்துச் சிதறுவதற்கும் கூட ஒரே காரணம் இருக்கலாம் என்கிறது கியாவோஸ் விதி. தமிழ் சினிமாக்களில் ‘தசாவதாரம்’ படத்திற்குப் பிறகு, எம்.ஏ.பாலா தமிழ் சினிமாவில் இவ்விதியைப் பயன்படுத்தி சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்கி வருகிறாராம்.

 

பார்க்காத காதல், சொல்லாத காதல் என தமிழ் சினிமாவின் அகராதியில் காதல் இல்லாத பக்கமே இல்லை. இந்தப் படத்தில், தன்னுடைய காதலியைத் தொலைத்துவிட்டு, தேடுகிற கார்த்திகேயனின் வாழ்க்கையில், ஒரு நாளில் நேர்கிற விபரீதமான நிகழ்வுகளும், சம்பவங்களும் திரைக்கதையை இன்னும் பலப்படுத்துகிறது. இறுதியில் கார்த்திகேயன் தனது காதலியுடன் சேர்ந்தாரா இல்லையா என்பது அத்தனை சுவாரஸ்யமாய், கமர்ஷியல் அம்சங்களுடன் சொல்லப்பட்டிருக்கிறதாம்.

 

டுவிங்கில் லேப்ஸ் சார்பில் மாரியப்பன் ராஜகோபால் தயாரிக்கும் இப்படத்தின் கதையின் நாயகர்களாக தீபக், எஸ்.பிளாக்பாண்டி, எஸ்.எஸ்.ஜெய்சிந்த் ஆகியோர் நடிக்க, நாயகிகளாக ஹரிதா, மலர் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் கொட்டாச்சி, ஜாங்கிரி மதுமிதா, மிப்பு, ஹேமா, மகேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

 

எப்.ராஜ் பரத் இசையமைக்கும் இப்படத்திற்கு டேவிட் ஜான் D.F.TECH ஒளிப்பதிவு செய்கிறார். ஆனந்த் ஜெரால்ட் படத்தொகுப்பு செய்ய, வடிவரசு பாடல்கள் எழுதுகிறார். இணை தயாரிப்பை கே.திலகர் கவ்னிக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி எம்.ஏ.பாலா இயக்குகிறார்.

Related News

747

”மலையாளத்தில் கூட எனக்கு இப்படி ஒரு அறிமுகம் கிடைக்கவில்லை” - நடிகர் ஷேன் நிகம் மகிழ்ச்சி
Tuesday January-07 2025

பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...

’ஐடென்டிட்டி’ படத்தை கொண்டாடும் ரசிகர்கள்! - உற்சாகத்தில் படக்குழு
Tuesday January-07 2025

மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...

நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு நாயகனாக நடிக்கும் ’எமன் கட்டளை’!
Tuesday January-07 2025

கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...

Recent Gallery