தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர் விவேக், திடீர் உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்தார். சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் விவேக்கின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். பலர் அவருடைய இறப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தனது நகைச்சுவையால் மக்களை மகிழ்வித்த நடிகர் விவேக், இன்று கண்ணீர் விட வைத்துவிட்டார்.
நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அவருடன் பணியாற்ற விரும்பிய நான், அதற்கான சூழலை எதிர்ப்பார்த்திருந்த நேரத்தில், அவருடைய மரண செய்தி என்னை அதிர்ச்சியடைய செய்துவிட்டது.
நடிகராக மட்டும் இன்றி நல்ல மனிதராகவும் வலம் வந்த விவேக்கின் இறப்பு, தமிழ் திரையுலகத்திற்கு மட்டும் அல்ல, தமிழ் சமூகத்திற்கே பேரிழப்பாகும்.
தன்னை நடிகராக அங்கீகரித்து கொண்டாடிய மக்களுக்கு எதையாவது திருப்பி செய்ய வேண்டும், என்ற எண்ணத்தில் ஒரு கோடி மரக்கன்றுகள் நட வேண்டும் என்ற லட்சியத்தோடு பயணித்த விவேக் என்ற நகைச்சுவை நடிகர் இன்று நம்முடன் இல்லை என்றாலும், அவருடைய சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவைக் காட்சிகளும், அவர் லட்சிய வழியில் நடப்பட்ட மரங்களும் என்றும் நம் மனதிலும், மண்ணிலும் நிலைத்திருக்கும்.
விவேக் அவர்களின் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களுடைய துக்கத்திலும் பங்கெடுத்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
‘தப்பாட்டம்’ படம் மூலம் கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமான பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், ‘களவாணி 2’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானர். அப்படத்தை தொடர்ந்து ‘டேனி’, விஜய் சேதுபதியின் ‘க/பெ.ரணசிங்கம்’ ஆகிய படங்களில் நடித்தவர், தற்போது சரவண சுப்பையா, எழில் உள்ளிட்ட பல முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...
இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...
‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...