’விஸ்வாசம்’ மற்றும் ‘நேர்கொண்ட பார்வை’ என ஒரே ஆண்டில் இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்த அஜித்தின் ‘வலிமை’ படம் கொரோனா பிரச்சனையால் காலதாமதம் ஆகி வருகிறது. படம் ரிலீஸ் பற்றி தெரியாத நிலையில், படம் பற்றிய எந்த ஒரு அப்டேட்டும் இல்லாததால் அஜித் ரசிகர்கள் மன நலம் பாதிக்கப்பட்டவர்களைப் போல், எங்கு சென்றாலும் ‘வலிமை’ அப்டேட் சொல்லுங்க, என்று கேட்டு வந்தார்கள்.
விளையாட்டு போட்டிகள், அரசியல்வாதிகளின் தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட பல இடங்களில் ரசிகர்கள் கொடுத்த தொல்லை தாங்காமல், அஜித்தே ஒரு விளக்கம் அளித்து அவர்களை ஆஃப் செய்யும் அளவுக்கு ரசிகர்களின் நிலை மிக மோசமாகிவிட்டது.
இதற்கிடையே, ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோசன் போஸ்டர் அஜித்தின் பிறந்தநாளான மே 1 ஆம் தேதி வெளியிடப்படும், என்று தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் ஆறுதல் அடைந்துள்ளார்கள். அதே சமயம், கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமடைந்திருப்பதால், புதிய திரைப்படங்களை ரிலீஸ் செய்வதில் பலர் தயக்கம் காட்டி வர, அஜித் படமும் இதில் பாதிப்படையும் சூழல் உருவாகியிருப்பதால், மீண்டும் அஜித் ரசிகர்கள் கவலை அடைந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், ‘வலிமை’ படம் பற்றி கசிந்திருக்கும் ஒரு தகவல் நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு நல்ல செய்தியாகவே இருக்கும். ஆம், ‘வலிமை’ படத்தை இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்துவிட வேண்டும், என்பதில் தயாரிப்பு தரப்பு உறுதியாக இருக்கிறதாம். ஒருவேளை கொரோனா பரவல் மிக கடுமையானால், படத்தின் ரிலீஸில் மாற்றம் ஏற்படலாமே தவிர, அதை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் படத்தின் ரிலீஸை தள்ளி வைக்க கூடாது, என்பதில் அஜித் மற்றும் தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளார்களாம்.
தற்போது முழு படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. மே 1 ஆம் தேதி பர்ஸ்ட் லுக் ரிலீஸ் செய்துவிட்டு, படத்தின் விளம்பர பணிகளையும் தொடங்க திட்டமிட்டுள்ளார்களாம்.
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...
சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள "தருணம்" திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...