விஜய் டிவி-யில் கமல்ஹாசன் நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிய இன்னும் 6 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில், இறுதிப் போட்டியில் வென்று டைடிலை வெல்லப் போவது யார்? என்ற தகவல் கசிந்துள்ளது.
தற்போது போட்டியில் 5 பேர் உள்ள நிலையில், இந்த வாரம் நடுவில் ஒருவர் வெளியேற்றப்படுவார் என்று கமல் ஏற்கனவே அறிவித்துள்ளார். எஞ்சியுள்ள நான்கு பேரில் யார் வெற்றியாளர்? என்பது தான் தற்போதைய தமிழகமே எதிர்ப்பார்க்கும் கேள்வி.
இந்த நிலையில், பிக் பாஸ் டைடில் சினேகனுக்கு வழங்க விஜய் டிவி மற்றும் பிக் பாஸ் குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காரணம், பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் வெற்றி பெற்றால், அந்த பணம் முழுவதையும் வைத்து 100 கிராமங்களுக்கு ஒரே நூலகத்தை கட்டப்போவதாகவும், அந்த நூலகத்திற்கு பிக் பாஸ் நூலகம் என்று பெயர் வைப்பதுடன், அதை கமல் கையாள் திறப்பேன், என்றும் சினேகன் நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.
அப்படி சினேகன் வெற்றி பெற்று நூலகம் கட்டி, அதை கமல் கையால் திறந்தால், அரசியலில் ஈடுபட உள்ள கமலுக்கு அது கொஞ்சம் பப்ளிசிட்டியாக அமைவதுடன், 100 கிராம மக்களை சந்திக்கும் ஒரு வாய்ப்பாகும் அமையும் என்பதால், பிக் பாஸ் டைடிலை சினேகனுக்கு கொடுக்க வேண்டும் என்று கமல் பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம், கமல் வெற்றியாளர்கள் விஷயத்தில் தலையிடவில்லை என்றால், நடிகர் கணேஷ் வெங்கட்ராமை வெற்றியாளராக தேர்வு செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இன்னும் 4 நாட்களில் பிக் பாஸ் டைடிலை வெல்லப் போவது யார்? என்பது தெரிந்துவிடும் என்றாலும், எஞ்சியிருக்கும் இந்த 5 போட்டியாளர்களில் கணேஷ் வெங்கட்ராம் அல்லது சினேகன் இவர்கள் இருவரில் ஒருவர் தான் பிக் பாஸ் டைடிலை வெல்வார்கள் என்பது மட்டும் உறுதி.
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...