நடிகர் விவேக்கின் திடீர் மரணத்தால் ஏற்பட்ட சோகம் மறைவதற்குள், இளம் நடிகர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் திரையுலகை மேலும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வரும் நிலையில், சினிமா பிரபலங்கள் அரசியல் பிரபலங்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தினசரி பாதிப்பின் எண்ணிக்கையும் வேகமாக உயர்ந்து வருவதால், அரசு பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தியிருப்பதோடு, விரைவில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, ’சம்யுக்தா 2’, ‘கெமிஸ்ட்ரி ஆஃப் கரியப்பா’ போன்ற கன்னட திரைப்படங்களை தயாரித்து நடித்தவர் மஞ்சுநாத். இவர் தற்போது ‘ஜீரோ பெர்சண்ட் லவ்’ என்ற படத்தை தயாரித்து அதில் ஹீரோவாகவும் நடித்து வந்தவர், வரும் ஜூன் 22 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், திடீர் உடல் நலக் குறைபாடு ஏற்பட்டு பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா இருப்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்து, அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் அவரது உடல் நிலை மோசமானதால் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை தீவிர வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
35 வயதாகும் நடிகர் டி.எஸ்.மஞ்சுநாத் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தது கன்னட திரையுலகை மட்டும் இன்றி இந்திய திரையுலகையே அதிர்ச்சியடைய செய்துள்ளது.
முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் அடுத்த படைப்பான ‘பாராசூட்’ தொடரின் டீசர் வெளியானது...
அபிகா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ’துள்ளும் காலம்’, ‘சோக்காலி’ ஆகிய படங்களை இயக்கிய ஏ...
மறைந்த எழுத்தாளர் ராஜ் கெளதமன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ள இயக்குநர் பா...