மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் நினைவு நாள் வரும் ஜூலை 21 ஆம் தேதி அனுசரிக்கப்பட இருக்கும் நிலையில், இவ்வாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சிவாஜி கணேசனின் நினைவு நாளன்று, அன்னை இல்லம் சார்பில், 108 பெண்களுக்கு அரை சவரண் தங்கம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகனும், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் பா.ஜ.க பிரமுகரான ராம்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரொனா தொற்று மீண்டும் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் பரவத் துவங்கியுள்ளது. மக்கள், அனைவரும் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கூட்டமாக கூடாதிருத்தல் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கடைப்பிடிக்க வேண்டுகிறேன்.
இத்தருணத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஜூலை 21 ஆம் தேதி நடிகர் திலகம் நினைவு நாளையொட்டி, இவ்வாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 108 பெண்களுக்கு தாலிக்கு அரை சவரன் தங்கம் வழங்கும் திட்டம் அன்னை இல்லம் சார்பில் துவக்கப்பட உள்ளது.
இதற்கான விதிமுறைகள், நெறிமுறைகள் யாவும் விரைவில் தெரிவிக்கப்படும். தங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் எதிர்ப்பார்க்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...
சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள "தருணம்" திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...