மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படம் கடந்த 9 ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
சாதி ரீதியிலான அடக்குமுறை மற்றும் தமிழகத்தில் நடந்த வன்முறை சம்பவங்களை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம், கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும், வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜும், நடிகர் தனுஷும் இரண்டாவது முறையாக இணைந்திருக்கிறார்கள். இந்த தகவலை நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தற்போது இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கியிருக்கும் நிலையில், படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்கும், என்றும் தனுஷ் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...
சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள "தருணம்" திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...