Latest News :

சிவகார்த்திகேயன் குரலில் உருவான ‘லிப்ட்’ பட பாடல் வெளியானது
Friday April-23 2021

ஈகா என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் ஹேப்ஸி தயாரித்திருக்கும் திரைப்படம்  ‘லிப்ட்’. பிக் பாஸ் கவின் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நாயகியாக அமிர்தா ஐயர் நடித்திருக்கிறார். இவர்களுடன் கிரண், காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ். யுவா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, பிரிட்டோ மைக்கேல் இசையமைத்திருக்கிறார்.ஜி மதன் படத்தைத் தொகுக்க  சண்டைக் காட்சிகளை ஸ்டன்னர் சாம் கவனிக்க, சதீஷ் கிருஷ்ணன் நடனம் அமைத்திருக்கிறார். சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் தயாராகியிருக்கும் 'லிப்ட்' படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி வினீத் வரபிரசாத் இயக்கியிருக்கிறார்.

 

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியாகி இருக்கிறது. பாடலாசிரியர் ஆர் நிஷாந்த் எழுதியிருக்கும் 'இன்னா மயிலு..' எனத்தொடங்கும் பாடலை படத்தின் நாயகனான கவினின் நண்பரும், முன்னணி நட்சத்திர நடிகருமான சிவகார்த்திகேயன் பாடியிருக்கிறார். சிவகார்த்திகேயன் குரலில் வெளியான 'கனா', 'டாக்டர்' ஆகிய படங்களின் பாடல்களைத் தொடர்ந்து 'லிப்ட்' படத்தின் பாடல்களும் தமிழ் திரை இசை ரசிகர்களின் ஆரவாரமான வரவேற்பை எளிதில் எட்டிப் பிடிக்கும். குறிப்பாக ஐ டி நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் இந்த பாடலையும், பாடல் வரிகளையும் கேட்டால் அவர்களின் மனதிற்கு நெருக்கமாக அமையும்.  

 

இந்த பாடலை பற்றி தயாரிப்பாளர் ஹேப்ஸி கூறுகையில், “இசையமைப்பாளர் பிரிட்டோ மைக்கேலின் துள்ளலான மெட்டுக்கு, நிஷாந்த் எழுதிய இளமை ததும்பும் பாடல் வரிகளை, தன் மாயாஜால குரலால் அற்புதமாக பாடியிருக்கிறார் சிவகார்த்திகேயன். படத்தின் முகவரியாக அமைந்திருக்கும் 'இன்னா மயிலு..' என்ற பாடலை சிவகார்த்திகேயன் பாட சம்மதித்ததும், படக்குழுவினருக்கு உற்சாகம் பீறிட்டது. இந்த பாடலுக்கான பதிவின் போது அவர் வருகை தந்து, எங்களுக்குள் இருந்த பதற்றத்தை தணித்து, சூழலை இனிமையானதாக்கி, எளிதாகவும், மிக நேர்த்தியாகவும் அந்தப் பாடலை பாடினார். வசீகரமான அவரின் குரலில் இந்த பாடல் வரிகளை கேட்டபோது ரசிகர்களின் ஆனந்த மனநிலையில் நான் உள்ளிட்ட படக்குழுவினர் இருந்தோம். 'இன்னா மயிலு..' என்ற பாடலை பாடிய சிவகார்த்திகேயனுக்கு மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

Related News

7486

”’தண்டேல்’ படத்திற்காக என்னை மாற்றிக் கொண்டேன்” - நடிகர் நாக சைதன்யா
Friday January-31 2025

இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...

விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற ‘தருணம்’! - ஜனவரி 31 ஆம் தேதி வெளியாகிறது
Wednesday January-29 2025

சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள  "தருணம்"  திரைப்படம், வரும்  ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான  திரையரங்குகளில் உலகமெங்கும்  வெளியாகிறது...

ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘மை லார்ட்’ படத்தின் முதல் பார்வை வெளியானது!
Wednesday January-29 2025

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...

Recent Gallery