Latest News :

’வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸில் திடீர் மாற்றம்!
Friday April-23 2021

அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’ படத்தின் ரிலீஸ் கொரோனா பிரச்சனையால் காலதாமதம் ஆவதோடு, அப்படத்தின் பர்ஸ்ட் லும் உள்ளிட்ட எந்த ஒரு தகவலையும் படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிடாததால் அஜித் ரசிகர்கள் அப்செட்டாகியுள்ளார்கள்>

 

இதற்கிடையே, அஜித்தின் பிறந்தநாளான மே 1 ஆம் தேதி ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்  வெளியிடப்படும் என்று தயாரிப்பு தரப்பு அறிவித்தது, ரசிகர்களை உற்சாகமடைய செய்தது.

 

இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனாவில் இரண்டாம் அலை மிக தீவிரமடைந்து வருவதால், ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.

 

இது குறித்து ‘வலிமை’ பட தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் நிறுவனத்தின் சார்பில் நாங்கள் கொடுத்த முந்தைய அறிக்கையில் வருகின்ற மே 1 ஆம் தேதி அஜித்குமார் அவர்களின் 50 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நடிப்பில், வினோத் இயக்கத்தில், எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடுவதாக அறிவித்து இருந்தோம்.

 

அந்த அறிவிப்பு வெளிவரும் போது, கொரோனா நோயின் இரண்டாவது அலை வரும் என்றோ, அதன் தாக்கம் சுனாமி போல தாக்கும் என்றோ சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இந்த தருணத்தில் தேசமெங்கும் எண்ணற்றோர் பொருளாதாரம் இழந்து, உற்றார் உறவினர் உயிர் இழந்து, நோய் பற்றிய பீதியிலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்து இருக்கின்றனர்.

 

இத்தகைய அசாதாரண சூழ்நிலையில் ஜீ ஸ்டியோஸ், பே வியூ ப்ரொஜெக்ட்ஸ், இப்படத்தில் நடித்துள்ள கலைஞர்கள், பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து எடுத்துள்ள முவிவின் படி, ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லும் வெளியீடு மற்றொரு தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.

 

நாம் அனைவரும் ஒன்றிணைந்து அனைவரின் நலத்துக்காகவும், பாதுகாப்புக்காகவும் பிரார்த்திப்போம்.” என்று தெரிவித்துள்ளார்.

 

Related News

7489

ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் வெளியான ‘சங்கராந்தி வஸ்துனம்’!
Sunday March-02 2025

ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...

விஷ்ணு மஞ்சுவின் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் வெளியானது!
Sunday March-02 2025

இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...

இயக்குநர் மோகன்.ஜி - ரிச்சர்ட் ரிஷி கூட்டணியில் உருவாகும் ‘திரெளபதி 2’!
Sunday March-02 2025

‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...

Recent Gallery