பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘சர்தார்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சர்தார் என்ற பாரசீகத்தில் ‘தலைவன்’ அல்லது ‘படைத்தளபதி’ என்று அர்த்தமாம்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன்குமார் தயாரிக்கும் இப்படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் சிம்ரன், முரளி ஷர்மா, முனீஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க, பிரபல பாலிவுட் நடிகர் சுயாஸ் பாண்டே, இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகிறார்.
கார்த்தி பல்வேறு வேடங்களில் நடிக்கும் இப்படத்தின் கதை வெவ்வேறு விதமான இடங்களில் நடப்பது போன்று அமைக்கப்பட்டிருப்பதால், படம் மிகப்பெரிய பொருட்ச்செலவில் மிக பிரம்மாண்டமான முறையில் உருவாக உள்ளது. தென்காசி தொடங்கி சென்னை மற்றும் வட இந்தியாவின் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் கலையை நிர்மாணிக்க, எம்.ஆர்.பொன்பார்த்திபன், ரோஜூ, பிபின்ரகு ஆகியோர் கதை, வசனம் எழுதுகிறார்கள். யுகபாரதி பாடல்கள் எழுத, திலீப் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.
சமீபத்தில் படப்பிடிப்பை தொடங்கிய ‘சர்தார்’ படக்குழு படத்தின் பர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டுள்ளது.
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...
சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள "தருணம்" திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...