யோகி பாபு நடிப்பில் கடந்த மாதம் வெளியான் எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தை இயக்கிய கெவின் இயக்கும் இரண்டாவது படம் ‘கும்பாரி’. ராயல் எண்டர்பிரைசஸ் சார்பில் ‘பறம்பு’ குமாரதாஸ் தயாரிக்கும் இப்ப்டத்தில் அபி சரவணன் நாயகனாக நடிக்க, மஹானா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஜான் விஜய், பருத்திவீரன் சரவணன், மதுமிதா, சாம்ஸ், காதல் சுகுமார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 30 நாட்களாக ஒரே கட்டமாக நடைபெற்று முடிவடைந்த நிலையில், படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
படம் குறித்து இயக்குநர் கெவின் கூறுகையில், “இந்த படம் காதல், காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. நாயகனின் காதலை சேர்த்து வைத்த பால்ய மீனவ நண்பன் திடீரென காணாமல் போகிறான். காணாமல் போன நண்பனை நாயகன் காப்பாற்றினாரா இல்லையா என்பதுதான் இப்படத்தின் கதை.
இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமாரி, நாகர்கோவில், பூவாறு, முட்டம், பறம்பு மற்றும் கேரளாவின் அடர்ந்த காட்டுப்பகுதி ஆகிய இடங்களில் 30 நாட்களாக ஒரே கட்டமாக நடத்தி முடித்துள்ளோம்.” என்றார்.
பிரசாத் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜெயபிரகாஷ் மற்றும் ஜெய்தன் இசையமைக்கிறார்கள். ஜெய் படத்தொகுப்பு செய்ய, ராஜு முருகன் நடனம் அமைத்துள்ளார். மைக்கல் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, கிருஷ்ணமூர்த்தி டிஐ செய்கிறார்.
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...
சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள "தருணம்" திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...