தமிழ் சினிமாவின் கவர்ச்சி நடிகைகளில் ஒருவரான விந்தியா, திடீரென்று மரணமடைந்ததாக வெளியான தகவல் திரையுலகை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த தகவலை நடிகை விந்தியாவே வெளியிட்டது கூடுதல் அதிர்ச்சி.
திரைப்பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் அதிமுக-வில் இணைந்த நடிகை விந்தியா, தேர்தல் நேரத்தில் மட்டும் தலை காட்டுவார். அதிமுக-வுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு, வாய்க்கு வந்தபடி பேசிவிட்டு, தேர்தல் முடிந்ததும் காணாமல் போய் விடுவார்.
தேர்தல் நேரத்தில் மட்டும் விந்தியாவின் பெயர் பத்திரிகைகளில் இடம்பெற்று வந்த நிலையில், தேர்தல் இல்லாத நேரங்களிலும் தனது பெயர் ஊடகங்களில் இடம்பெற வேண்டும், என்று அவர் நினைத்தாரோ என்னவோ, அவர் இறந்தவிட்டதாக ஒட்டப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டரை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.
அந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்ட தகவல் யாருக்கும் தெரியாத நிலையில், அதை தெரியப்படுத்தியிருக்கும் விந்தியா அதனுடன், திமுக-வுக்கு எதிராக பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், ”உலகத்துலேயே தன்னோட கண்ணீர் அஞ்சலி போஸ்டர் பார்த்து தானே சிரிக்குற பாக்கியம் கிடைச்சவங்கல நானும் ஒருத்தி, ஸ்டாலினுக்கு வருங்கால முதல்வரேனு போஸ்டர் போட்டு அலுத்து போயிட்டாங்க போல, இந்த மாதிரி போஸ்டர் பார்த்தா ஆயுசு கூடுமாம். ஆண்டவனை தவிர எனக்கு எண்ட் கார்டு போட எவனாலயும் முடியாது ராசா” என்று விந்தியா தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...
சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள "தருணம்" திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...