தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகும் திரைப்படம் ‘பாம்பாட்டம்’. வி.சி.வடிவுடையான் எழுதி இயக்கும் இப்படத்தை வைத்தியநாதன் பிலிம் கார்டன் நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் மிகப்பெரிய பொருட்ச்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இவர் ஏற்கனவே, ‘ஓரம் போ’, ‘வாத்தியார்’, ‘6.2’ ஆகிய வெற்றிப் படங்களை தயாரித்திருக்கிறார்.
ஜீவன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நாயகிகளாக ரித்திகா சென் மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகியோர் நடிக்க, இளவரசி நாகமதி என்ற மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் மல்லிகா ஷெராவத் நடிக்கிறார். இவர்களுடன் சுமன், சரவணன், ரமேஷ்கண்ணா, வெங்கட் என ஏரளாமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
தற்போது மல்லிகா ஷெராவத் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில், ஷெராவத் நடிக்கும் இளவரசி நாகமதியின் லுக் போஸ்டரை ’பாம்பாட்டம்’ படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
1800, 1947, 1990 என மூன்று கால கட்டங்களில் நடக்கும் வரலாற்று பின்னணி கொண்ட ஹாரர் மற்றும் திரில்லர் பாணியில் கையாளப்படும் கதை, என்பதால் பெரும் பொருட்செலவில் செட்டுகள் அமைத்து கம்ப்யூட்டர் கிராபிக்ஸுக்கும் மிக முக்கியம் கொடுத்து தயாரிக்கப்படுகிறது.
இனியன் ஜே.ஹாரிஸ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அம்ரிஷ் இசையமைக்கிறார். பா.விஜய், யுகபாரதி, விவேகா ஆகியோர் பாடல்கள் எழுத, சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு செய்கிறார். ஏ.பழனிவேல் கலையை நிர்மாணிக்க, சூப்பர் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். தினேஷ், சிவசங்கர் ஆகியோர் நடனத்தை வடிவமைக்க, இணை தயாரிப்பாளராக பண்ணை ஏ.இளங்கோ பணியாற்றுகிறார். மக்கள் தொடர்பு பணியை மணவை புவன் கவனிக்கிறார்.
ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...
இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...
‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...