விஜயின் ‘மெர்சல்’ படத்திற்கு எதிராக வழக்கு, டைடிலுக்கு தடை என்று பல பிச்சினைகள் இருந்தாலும், ஒரு பக்கம் படத்தின் மீதான் எதிர்ப்பார்ப்பும், சாதனைகளும் அதிகரித்துக்கொண்டு தான் போகிறது.
அதிக லைக்குகளில் ‘விவேகம்’ படத்தின் சாதனையை முறியடித்த ‘மெர்சல்’, தற்போது மேலும் ஒரு புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதாவது, இதுவரை மெர்சல் டீசரை யுடியுபில் 2 கோடி பார்வையாளர்கள் பார்த்துள்ளார்களாம். இதுவரை எந்த ஒரு திரைப்பட டீசரையும் இத்தனை பேர் பார்த்ததில்லை. இதுவும் விஜயின் உலக சாதனைகளில் ஒன்றாம்.
இதுவரை 7 லட்சம் லைக்குகளை பெற்றுள்ள ‘மெர்சல்’ டீசர், தற்போது 2 கோடி பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்திருப்பதை சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...