தனி இசைப்பாடல்களுக்கு மக்கள் கொடுக்கும் வரவேற்பால், தமிழ் இசையுலகில் தனி இசைப்பாடல்கள் ஆல்பங்களின் வருகை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், காதல் தோல்வியை சொல்லும் வகையில், ‘லவ் சிக்’ என்ற பெயரில் தமிழ் வீடியோ இசை ஆல்பம் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த வீடியோ பாடலை நவீன் மணிகண்டன் என்பவர் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
தனது புதிய திரைப்பட பணியில் ஈடுபட்டிருந்த இயக்குநர் நவீன் மணிகண்டன், கொரோனா பொதுமுடக்கத்தால், தனது திரைப்பட பணியை ஒத்தி வைத்தாலும், நேரத்தை வீணாக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக, தனது படைப்பாற்றலை வெளிப்படுத்தும் விதமாக இளைஞர்களை கவரும் இந்த ‘காதல் சிக்’ காதல் நோய் ஆல்பத்தை தனது வி.எச்.ஸ்டார் மேக்கர்ஸ் சார்பில் தயாரித்து இயக்கியுள்ளார்.
‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தில் நடித்த பாண்டி கமல், இந்த இசை ஆல்பத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். இவர் ‘மகராசி’, ‘அன்பே வா’ ஆகிய தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். கதாநாயகியாக ‘அம்புலி’ படத்தில் நடித்த ஜோதிஷா நடித்துள்ளார்.
கவி கார்கோ வரிகளுக்கு அனீஷ் சாலமன் இசையமைக்க, விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் ராஜ கணபதி குரலில் உருவாகியுள்ள இப்பாடல் காட்சியை வினோத் படத்தொகுப்பு செய்துள்ளார்.
மகாபலிபுரம் பகுதியில் படமாக்கப்பட்ட இப்பாடலில், மகாபலிபுரம் கடற்கரை சிற்பங்கள், குடைவரை கோயில்கள் அனைத்தும் அழகாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
நகைச்சுவை நடிகர் சதீஷ், ரமேஷ் திலக், விஜய் டிவி புகழ் ராமர், அர்ஜுன் ஆகியோர் இந்த இசை ஆல்பத்தை பார்த்து பாராட்டி இருக்கிறார்கள். அவர்கள் கொடுத்த உந்துதலின் பேரில் பலரும் இந்த ஆல்பத்தை பார்த்து வாழ்த்தி உள்ளார்கள்.
இதைப் பார்த்துக் கவரப்பட்ட டியோ இசை நிறுவனம் இந்த ஆல்பத்தை வாங்கி யூடியூப் தளத்தில் வெளியிட, மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.
ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...
இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...
‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...