பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜூலி, சென்னை மெரீனா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மக்களால் விரும்பப்பட்டவராக இருந்தார். அவரை வீர தமிழச்சி என்று கூறி மக்கள் கொண்டாடினார்கள். ஆனால், அவர் பிக் பாஸ் போட்டியில் விளையாடிய விதத்தை பார்த்து அவரை வெறுத்த மக்கள் அவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் பல பதிவுகளை வெளியிட்டு வந்தனர்.
இதற்கிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தும், ஜூலி மீது இருந்த மக்களின் வெறுப்பு அதிகரித்ததே தவிர குறையவில்லை. கல்லூரிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்ட ஜூலிக்கு, மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அவர் மேடை ஏறும்போது பெரும் கூச்சலிட்டு அவரை அவமானப்படுத்தினார்கள். இப்படி பல இடங்களில் பல அவமானங்களை சந்தித்த ஜூலி, எது செய்தாலும், அதை கிண்டல் செய்து வந்தார்கள்.
இதனால், பெரும் பாதிப்புக்குள்ளான ஜூலி, ஒரு கட்டத்தில் மக்களிடம் மன்னிப்பு கேட்டு பதிவு ஒன்றையும் வெளியிட்டார். இப்படி தொடர்ந்து மக்களால் வெறுக்கப்பட்டு வரும் ஜூலி, விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜூலி, ”மெரீனாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துக் கொண்ட போது மக்கள் எனக்கு தண்ணீர் கொடுத்தார்கள். ஆனால், நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பிறகு, அதே மெரினாவில் மக்கள் தண்ணீர் குடித்துவிட்டு, அந்த தண்ணீரை என் முகம் மீது துப்பினார்கள். இதுபோன்ற பல அவமானங்களை சந்தித்த பிறகு தான் இந்த இடத்தில் நான் வந்திருக்கிறேன்.” கூறி கண் கலங்கினார்.
ஜூலி, இப்படி ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தது பற்றி கூறினாலும், அவர் மீது இரக்கப்படாலும், நெட்டிசன்கள் அவரை தொடர்ந்து கலாய்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...
இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...
‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...