இந்தியாவை கொரோனா இரண்டாவது அலை புரட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறது. சாமாணிய மக்கள் முதல், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே, தமிழ் சினிமாவில் நடிகையாகவும், பாடகியாகவும் வலம் வரும் ஆண்ட்ரியாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவரே, சமூக வலைதளப் பக்கத்தில் தகவல் வெளியிட்ட தோடு, மக்களை பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனா பரவலால் சினிமா துறை பெரிதும் பாதிக்கப்பட்டாலும், சில முன்னணி நடிகர், நடிகைகளுக்கு கொரோனா ஊரடங்கு, தங்களுடைய குடும்பத்தாருடன் நேரத்தை செலவிடுவதற்கான விடுமுறையாகவே அமைந்தது. மேலும், சில நடிகர் நடிகைகள் தங்களுடைய குடும்பத்துடன் எப்படி நேரத்தை செலவிடுகிறோம், என்பதை தினமும் வீடியோவாக வெளியிட்டு, பொருளாதார ரீதியாக கஷ்ட்டப்பட்டுக் கொண்டிருந்த மக்களை கடுப்பேற்றவும் செய்தார்கள்.
இப்படி கொரோனா பரவலால் பலர் பாதிக்கப்பட்டாலும், சில சினிமா நடிகர், நடிகைகள் தேவையான அத்தியாவாசிய பொருட்களை வீடுகளில் சேமித்து வைத்துக் கொண்டு, தாங்களும் வீட்டை தவிர வேறு எங்கும் செல்லாமல் இருக்கிறார்கள். இப்படி வீடுகளில் பாதுகாப்பாக இருக்கும் இவர்களையும் கொரோனா தாக்குவது எப்படிதான் என்பது இதுவரை தெரியவில்லை.
அந்த வகையில், நடிகை ஆண்டியா கூடா வீட்டில் தான் பாதுகாப்பாக இருந்தார். ஆனால், அவரையும் கொரோனா தாக்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...
சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள "தருணம்" திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...