ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ‘எனிமி’ படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆர்யா வில்லனாக நடிக்கும் இப்படத்தில் மிருனாளினி நாயகியாக நடிக்கிறார்.
இந்த நிலையில், விஷாலின் புதிய படம் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. விஷாலின் 31 வது படமாக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் து.ப.சரவணன் இயக்குகிறார். இவர் பல விருதுகளை வென்ற ‘எது தேவையோ அதுவே தர்மம்’ என்ற குறும்படத்தை இயக்கியவர் ஆவார்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படம், அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் ஒரு சாமானியன், என்ற கருவை மையமாக வைத்து உருவாக உள்ளது.
பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் பற்றிய மற்ற விபரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளனர்.
ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...
இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...
‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...