அறிமுக இயக்குநர் சரண் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள பைலட் படம் ‘நிலைகெட்ட மனிதர்கள்’. சமூக பிரச்சனை மற்றும் கல்வி குறித்து பேசும் இப்படத்தில் இயன் கிறிஸ்டியன், மதுக்கூர் சத்யா, இப்ராகிம், முத்து.வி, நா.ராமலிங்கம், எஸ்.கே.மீசை இராஜேந்திரன், ம.மோகன்ராஜ், சதீஷ்குமார்.ச, மாலிக்கான் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படம் குறித்து இயக்குநர் சரண் மணி கூறுகையில், “இந்த படம் கல்வி பிரச்சனையை மையமாக கொண்டது. காடு அருகில் குடிசையில் வசிக்கும் ஆறுமுகம் தன் மகனை படிக்க வைக்க முயற்சிக்கும் போது ஏற்படும் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை உரக்க சொல்லும் படம் ‘நிலைகெட்ட மனிதர்கள்’ என்றார்.
ஸ்ரீராமன் ரா.கு பழனி ஒளிப்பதிவில், ரவிராகவ் இசையில் உருவாகியுள்ள ‘நிலைகெட்ட மனிதர்கள்’ பைலட் படம் வரும் மே 23 ஆம் தேதி MOVIEWUD ஒடிடி தளத்தில் வெளியாகிறது.
ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...
இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...
‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...