தமிழ் சினிமாவில் வில்லன், கதாநாயகன் உள்ளிட்ட பல வேடங்களில் நடித்து வரும் மன்சூரலிகான், திடீர் உடல் நிலை பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட நடிகர் மன்சூரலிகான், கொரோனா என்பது பொய், மாஸ்க் அணிய வேண்டிய தேவையில்லை, என்று கடந்த ஆண்டு முதலே கூறி வருகிறார்.
மேலும், நடிகர் விவேக் உயிரிழந்தது தொடர்பாக ஊடகங்களுக்கு ஆக்ரோஷமாக பேட்டியளித்த மன்சூரலிகான், கொரோனா டெஸ்ட் எடுப்பதை நிறுத்த வேண்டும் என்றும், கொரோனா தடுப்பூசி போட்டதால் தான் நடிகர் விவேக் மரணமடைந்தார், என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து நடிகர் மன்சூரலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் முன் ஜாமீன் பெற்றார்.
இந்த நிலையில், நடிகர் மன்சூரலிகான் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது கிட்னியில் பெரிய சைஸ் கல் அடைப்பு ஏற்பட்டு மிகுந்த அவதிப்பட, உடனடியாக அவர் ஆம்பூலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.
கொரோனா டெஸ்ட் உட்ள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் மன்சூரலிகானுக்கு நடைபெற்று வருவதாகவும், அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...
இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...
‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...