கொரோனாவால் பாதிக்கப்படும் திரையுலக பிரபலங்கள் உயிரிழந்து வரும் சம்பவம் திரையுலகினரை பெரும் அதிர்ச்சியடைய செய்த நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான விவேக்கின் திடீர் மரணம் சோகத்தில் இருந்து தமிழ் திரையுலகினர் இன்னும் மீண்டு வராத நிலையில், இன்று மற்றொரு முன்னணி காமெடி நடிகர் உயிரிழந்த சம்பவம் திரையுலகினருக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.
ஆம், பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வந்த நெல்லை சிவா இன்று திடீர் உடல் நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். அவருக்கு வயது 69.
உடல் நிலை குறைவால் சிகிச்சை பெற்று வந்த நெல்லை சிவா இன்று மாலை சுமார் 6 மணியளவில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். நாளை அவரது சொந்தா ஊரான நெல்லை மாவட்டம், பணகுடியில் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாண்டியராஜன் இயக்கிய ‘ஆண்பாவம்’ படத்தில் சிறு காட்சியின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமான நெல்லை சிவா, இதுவரை சுமார் 600 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். வடிவேலுடன் அவர் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. குறிப்பாக, வடிவேலு “கிணத்த காணோம் என்று போலீசில் புகார் அளிக்கும்” காட்சியின் மூலம் நெல்லை சிவா பிரபலமடைந்தார்.
ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...
இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...
‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...