தொலைக்காட்சி தொடர்களில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் தொடர் ‘செம்பருத்தி’. டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்த இத்தொடரின் மூலம் ஜீ தமிழ் தொலைக்காட்சியும் மக்களிடம் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்ததோடு, அந்த தொலைக்காட்சியின் மற்ற தொடர்களையும் மக்கள் பார்க்க தொடங்கினார்கள்.
இப்படி ஜீ தமிழ் தொலைக்காட்சி தமிழகத்தில் பெரிய அடையாளத்தை கொடுத்த ‘செம்பருத்தி’ தொடரில் பார்வதி என்ற கதாப்பாத்திரத்தில் கதாநாயகியாக நடித்து வரும் ஷபானாவுக்கு என்று தனி ரசிகர்கள் வட்டமே இருக்கிறது. இவரை சமூக வலைதளங்களில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், நடிகை ஷபானாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும், அவர் சீரியல் நடிகர் ஒருவரை காதலித்து வருவதாகவும், அவரை விரைவில் கரம் பிடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
’பாக்கியலட்சுமி’ என்ற தொடரில் நடித்து ஆர்யன் என்பவரும், நடிகை ஷபானாவும் காதலித்து வருகிறார்களாம். இவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் ரசிகர்களுடன் சமூக வலைதளம் மூலம் நடிகர் ஆர்யன் கலந்துரையாடிய போது, ரசிகர் ஒருவர் திருமணம் குறித்து கேட்க, அதற்கு பதிலளித்த ஆர்யன், நடிகை ஷபானாவின் பெயரை குறிப்பிட்டு, “இவங்களுக்கு என்ன பதில் சொல்வது” என்று கேட்டார். ஆர்யனின் இந்த பதிவுக்கு பதில் அளித்த நடிகை ஷபானா “என்னுடையது” என்று பதிவிட்டுள்ளார்.
ஆர்யன் - ஷபானா ஆகியோரது இத்தகைய சோசியல் மீடியா பதிவுகளை பார்த்த ரசிகர்கள் இவர்கள் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறிவருகிறார்கள்.
ஆனால், இது குறித்து இதுவரை ஆர்யன் மற்றும் ஷபானா தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. அதே சமயம், இதற்கு அவர்கள் மறுப்பும் தெரிவிக்கவில்லை.
ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...
இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...
‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...