கொரோனவால் பாதிக்கப்படும் நடிகர்கள் பலர் தொடர்ந்து உயிரிழந்து வரும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், நடிகர் மாறன் கொரோனவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த சம்பவம் திரையுலகினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதியில் வசித்து வருபவர் மாறன். திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இவர், விஜயின் ‘கில்லி’ படத்தில் ஆதிவாசி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அப்படத்தை தொடர்ந்து ‘மாநகரம்’, ‘டிஷ்யூம்’, ‘பட்டாசு’, ‘தலைநகரம்’, ’வேட்டைக்காரன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர், பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சார்பட்டா’ திரைப்படத்தில் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் மாறனை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
48 வயதாகும் மாறன் திரைப்படங்களில் நடிப்பது மட்டும் இன்றி, மேடை கச்சேரிகளில் கானா பாடல்களும் பாடி வந்துள்ளார்.
ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...
இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...
‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...