தமிழ் சினிமாவில் சாதி பற்றி பேசும் திரைப்படங்களின் வருகை அதிகரித்து வரும் நிலையில், சாதி மாற்று திருமணத்தை எதிர்க்கும் பெற்றோர்களால், பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி பேசும் திரைப்படமாக ‘காயல்’ உருவாகியுள்ளது.
ஜே ஸ்டுடியோஸ் ஜேசு சுந்தரமாறன் தயாரிப்பில் தமயந்தி இயக்கும் இப்படத்தில் லிங்கேஷ், ஐசக் வர்கீஸ், காயத்ரி, ஸ்வாகதா, ரமேஷ் திலக், ரேடியோ சிட்டி பரத் ஆகியோர் நடிக்கிறார்கள். அனுமோள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
காதலும் பயணமும் கலந்த ஒரு திரைவடிவமாக உருவாகியுள்ள இப்படம், ஒரு பெண்ணுடைய தேர்வை அங்கீகரிக்காத சமூகத்தை நோக்கி கேட்கும் கேள்வியாக இப்படத்தின் கருவை இயக்குநர் தமயந்தி கையாண்டுள்ளார்.
கார்த்திக் சுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜஸ்டின் கெனன்யா இசையமைத்திருக்கிறார். பி.பிரவீன் பாஸ்கர் படத்தொகுப்பு செய்கிறார்.
முழுக்க முழுக்க கடல் சார்ந்த இடங்களான பாண்டிச்சேரி, நாகப்பட்டினம், வேளாங்கன்னி, ராமேஸ்வரம் போன்ற பகுதிகளில் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.
ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...
இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...
‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...