கொரோனாவால் பாதிக்கப்படும் சினிமா பிரபலங்கள் பலர் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்துக் கொண்டிருப்பதால் திரையுலகினரிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இயக்குநர்கள் தாமிரா, கே.வி.ஆனந்த், நடிகர்கள் மாறன், ஜோக்கர் துளசி உள்ளிட்ட பல்லர் கொரோனா பாதிப்பால் மரணமடைந்த நிலையில், பிரபல குணச்சித்திர நடிகரான நிதிஷ் வீரா கொரோனா பாதிப்பால் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜயகாந்தின் ‘வல்லரசு’ படம் மூலம் நடிகராக அறிமுகமான வீரா, ’புதுப்பேட்டை’, ‘வெண்ணிலா கபடி குழு’, ’படைவீரன்’, ‘காலா’, ‘அசுரன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருபவர், வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நடிகர் நிதிஷ் வீரா, இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ‘கனா’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான நடிகர் அருண்ராஜா காமராஜாவின் மனைவி சிந்துஜாவும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று நள்ளிரவு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.
ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...
இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...
‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...