Latest News :

துளசி அய்யா வாண்டையார் இறப்புக்கு நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் இரங்கல்
Saturday May-22 2021

சுதந்திர போராட்ட வீரரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான முன்னாள் எம்.பி துளசி அய்யா வாண்டையார் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 95. அவருடைய இறப்புக்கு அரசியல் தலைவர்கள்  இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

 

தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபரான திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், துளசி அய்யா வாண்டையார் இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”ஐயா, துளசி அய்யா வாண்டையாரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். 

 

சுதந்திர போராட்டத்திற்காக போராடியவர், டெல்டா மாவட்ட மக்களின் கல்விக்காகவும் தொடருந்து உழைத்துக் கொண்டிருந்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும், எம்.பி-யாகவும் சிறப்பாக செயலாற்றியவர், தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி புஷ்பம் கல்லூரியின் தாளாளராக இருந்து, டெல்டா மாவட்டங்களில் உள்ள குடும்பங்களின் முதல் தலைமுறை பட்டதாரிகளை உருவாக்கினார்.

 

பெருந்தலைவர் காமராஜர், மூதறிஞர் ராஜாஜி, முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்களோடு நெருங்கிப் பழகியவராக இருந்தாலும், தனது எளிமையான வாழ்க்கை முறை மூலமாகவும், நேர்மையான அரசியல்வாதியாகவும் மக்கள் மனதில் இடம் பிடித்தவர். ஐயா நம்மை விட்டு பிரிந்தாலும், அவருடைய சாதனைகள் மூலம் என்றுமே நம் மனதில் நிலைத்திருப்பார்.” என்று தெரிவித்துள்ளார்.

Related News

7530

சோனியா அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள ஹாரார் திரில்லர் ’7G’ ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது!
Tuesday June-25 2024

ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் சார்பில், இயக்குநர் ஹாருன் தயாரித்து, எழுதி,  இயக்க, சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பில், மாறுபட்ட மிரட்டலான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள 7G திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது...

அதர்வா-நிமிஷா சஜயன் நடிக்கும் ’டிஎன்ஏ’ படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது!
Tuesday June-25 2024

ஒலிம்பியா மூவீஸ், மக்களை மகிழ்விக்கும் வகையிலான பல பொழுதுபோக்கு திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது...

’கல்கி 2898 கி.பி’ படத்தின் க்ரோனிக்கிள்ஸ் வீடியோ வெளியானது!
Tuesday June-25 2024

சமீபத்தில் வெளியான டிரெய்லரைத் தொடர்ந்து எட்டுதிக்கும் ’கல்கி 2898 கிபி’ படத்தின் பேச்சாகவே இருக்கிறது...