Latest News :

கதாநாயகியான பின்னணி பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன்
Friday May-21 2021

தன் குரல் வலத்தால் பின்னணி பாடகியாக ரசிகர்களை கவர்ந்த ஸ்வாகதா கிருஷ்ணன், விரைவில் தனது நடிப்பு மூலம் நடிகையாக கவர இருக்கிறார். ஆம், பிரபல பின்னணி பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன், கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

 

ஜோதிகா, விதார்த் நடிப்பில் உருவான காற்றின் மொழி படத்தில் ‘டர்ட்டி பொண்டாட்டி’, பார்ட்டி படத்தில் ஜிஎஸ்டி,  ஜடா படத்தில் அனிருத்துடன் இணைந்து அப்படிப் பாக்காதடி, வஞ்சகர் உலகம் படத்தில் கண்ணனின் லீலை உள்ளிட்ட நிறைய பாடல்களைப் பாடிய ஸ்வாகதா கிருஷ்ணன், திரைத்துறைக்குள் ஏற்கெனவே நுழைந்துவிட்டாலும் பின்னணிப் பாடகியாக மட்டுமே உலா வந்தவர், இனி நாயகியாகவும் உலா வர இருக்கிறார்.

 

ஸ்வாகதா கிருஷ்ணன், இசையமைத்து, பாடி நடித்து வெளியிட்ட “அடியாத்தே...” என்ற வீடியோ இசை ஆல்பத்தை கெளதம் வாசுதேவ் மேனன், யுவன் ஷங்கர் ராஜா, ரா. பார்த்திபன், விக்னேஷ் சிவன், இயக்குனர் திரு, அசோக் செல்வன், பாடகி சின்மயி, ஹரீஷ் கல்யாண் உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தனர்.

 

ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற இப்பாடல், ஸ்வாகதா கிருஷ்ணனின் குரலுக்கு மட்டும் இன்றி அவருடைய நடிப்புக்காகவும் புதிய ரசிகர்களைப் பெற்று தந்தது.

 

இந்த நிலையில், ஸ்வாகதா கிருஷ்ணன் கதாநாயகியாக நடித்திருக்கும் ‘காயல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது.

 

ஜே ஸ்டுடியோஸ் ஜேசு சுந்தரமாறன் தயாரிப்பில் தமயந்தி இயக்கியுள்ள இந்தப் படம், சாதி மறுப்புத் திருமணத்தை எதிர்க்கும் பெற்றோர்களால், பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி பேசும் கருவைக் கொண்ட அழுத்தமான படமாக உருவாகி இருக்கிறது. 

 

பாடகியாக இருந்த தான் நடிகையானது குற்றி ஸ்வாகதா கிருஷ்ணன் கூறுகையில், “தான் நடிகையாக முழுமுதற் காரணம் எனது சகோதரி நடிகை மாயா தான். நடிப்பதற்கு உடலையும் மனதையும் தகுதிபடுத்திக் கொள்ளுமாறு சகோதரி சொன்னதைக் கேட்டு அதற்கானப் பணிகளில் இறங்கினேன்.

 

நடிப்பு ரீதியாக என்னை செம்மைப்படுத்திக் கொள்ள ஆதிசக்தி லெபாரட்டரி ஆஃப் தியேட்டரில் நடிப்பு பயிற்றி பெற்றேன். பின்னர் ஆனந்த் சாமி என்ற தியேட்டர் ஆர்டிஸ்டிடமும் நடிப்பு பழகினேன்.

 

இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் மற்றும் பிப்ரவரிமாதங்களில் ஒரு தமிழ்ப் படம் மற்றும் ஒரு தமிழ்ப் படம் என இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமானேன்.

 

Actress Swagatha Krishnan

 

அந்தவேளையில் தான், பிப்ரவரி இறுதியில் இயக்குநர் தமயந்தியிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. இயக்குநர் தமயந்தி கதை சோனவுடன் எனக்கு பிடித்துவிட்டது. உடனெ ஓகே சொல்லிவிட்டேன்.

 

திரைக்குப் புதிது என்பதால் ஆரம்ப நாட்களில் சிறு பதற்றம் இருந்தாலும் எனது இயக்குநர் பக்கபலமாக இருந்தால் காயல் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டேன்.” என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

 

ஸ்வாகதா மூன்றாவதாக ஒப்பந்தமான ’காயல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முதலில் முடிவடைந்த நிலையில், அவரது மற்ற இரண்டு படத்தின் படப்பிடிப்புகளும் கொரோனா ஊரடங்கு முடிவடைந்த உடனே தொடங்க உள்ளதாம்.

Related News

7534

சோனியா அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள ஹாரார் திரில்லர் ’7G’ ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது!
Tuesday June-25 2024

ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் சார்பில், இயக்குநர் ஹாருன் தயாரித்து, எழுதி,  இயக்க, சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பில், மாறுபட்ட மிரட்டலான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள 7G திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது...

அதர்வா-நிமிஷா சஜயன் நடிக்கும் ’டிஎன்ஏ’ படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது!
Tuesday June-25 2024

ஒலிம்பியா மூவீஸ், மக்களை மகிழ்விக்கும் வகையிலான பல பொழுதுபோக்கு திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது...

’கல்கி 2898 கி.பி’ படத்தின் க்ரோனிக்கிள்ஸ் வீடியோ வெளியானது!
Tuesday June-25 2024

சமீபத்தில் வெளியான டிரெய்லரைத் தொடர்ந்து எட்டுதிக்கும் ’கல்கி 2898 கிபி’ படத்தின் பேச்சாகவே இருக்கிறது...