கொரோனாவின் இரண்டாம் அலை தமிழகத்தில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக களத்தில் இறங்கி பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.
இதற்கிடையே கொரோனாவால் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் மரணமடைந்து வருவது பெரும் அதிர்ச்சியளித்து வரும் நிலையில், பிரபல இயக்குநரின் குடும்பத்தில் கொரோனா கோரதாண்டவம் ஆடிய சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.
‘மேயாதமான்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ரத்னகுமார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அமலா பாலை வைத்து ‘ஆடை’ என்ற படத்தை இயக்கிய ரத்னகுமார், விஜயின் ‘மாஸ்டர்’ படத்தில் பணியாற்றியதோடு, அப்படத்தின் வசனத்தையும் எழுதினார்.
இந்த நிலையில், இயக்குநர் ரத்னகுமாரின் குடும்பத்தில் உள்ள 18 மாத குழந்தை முதல் 83 வயதுடைய மூதாட்டி வரை என பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சுமார் 20 நாட்களாக சிகிச்சை மேற்கொண்டு வந்தவர்கள், தற்போது தான் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார்களாம்.
இந்த தகவலை தெரிவித்திருக்கும் இயக்குநர் ரத்னகுமார், அனைவரும் பாதுகாப்பாகவும், விழிப்பாகவும் இருக்கும்படியும் கேட்டுகொண்டுள்ளார்.
ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...
இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...
‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...