மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று ‘ஜகமே தந்திரம்’. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், தனுஷ் நடித்திருக்கும் இப்படத்தின் வெளியீடு கொரோனா பரவல் காரணமாக காலதாமதமாகி வந்த நிலையில், இன்று படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
ஏற்கனவே படத்தில் பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் டிரைலர் வெளியான சில மணி நேரங்களில் பல லட்ச ரசிகர்களை கடந்து வைரலாகி வருகிறது.
லோக்கல் தாதா ஒருவரின் மிகப்பெரிய பயணத்தை மிக பிரம்மாண்டமான முறையில் படமாக்கியிருக்கும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் விறுவிறுப்பான திரைக்கதையும், தனுஷின் ஈர்ப்பான நடிப்பும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருப்பதாக கூறுகிறார்கள்.
YNot Studios மற்றும் Reliance Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் வரும் ஜூன் 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.
ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...
இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...
‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...