குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவின் முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜிப்ரான், இதுவரை எந்த இசையமைப்பாளரும் செய்யாத ஒன்றை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
‘சாஹோ’ என்ற மிகப்பெரிய பிரம்மாண்ட திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் ஈர்த்த இசையமைப்பாளர் ஜிப்ரான், அப்படத்தில் இருந்து வெளிவராத ஒரு பின்னணி இசை தொகுப்பினை, இதுவரையிலும் இல்லாத வகையில் NFT Non Fungible Token எனும் முறையில் ஏலத்தில் வெளியிடவுள்ளார். இம்முறையில் மிக உயரிய விலைக்கு இந்த இசைத்தொகுப்பினை எவர் வேண்டுமானாலும் வாங்க முடியும். அந்த வகையில் இதன் மூலம் கிடைக்கும் நிதி, நமது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதி அமைப்பிற்கும், இக்காலகட்டத்தில் பணியின்றி தவிக்கும் இசைத்துறை சார்ந்தோருக்கும் பிரித்து அளிக்கப்படவுள்ளது.
இது குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரான் கூறியதாவது, படத்தில் இடம்பெறாத ‘சாஹோ’ பட ஹீரோ தீம் இசையை, NFT ( Non-Fungible Token ) முறையில் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த முறையில் வரும் தொகையில் 50% தமிழ்நாடு முதல்வர் எம்.கே.ஸ்டாலின் அவர்களின் பேரிடர் நிவாரண நிதிக்கும், அடுத்த 50% கொரோனா தொற்றின் காரணமாக வேலையில்லாமல் அவதிப்படும் இசைக்கலைஞர்களுக்கும் வழங்கப்படும். இதுதான் இந்தியாவின் முதல் முறையாக இசைத்துறையில் செய்யப்பட்ட NFT ( Non-Fungible Token ) முயற்சி ஆகும். இந்த இசை தொகுப்பினை, பட இயக்குநரை தவிர வேறு யாரும் கேட்டதே இல்லை. இந்த இசை எங்கள் இருவருக்குமே மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அப்போது காட்சியின் தன்மை கருதி, வேறு வகையிலான இசைத்துணுக்கை செய்தோம். அதனால் இந்த இசையினை எங்குமே வெளியிடவில்லை.
இந்த ஏலத்தில் பங்குகொள்ளும் உறுப்பினர்கள், இந்த இசைத்தொகுப்பினை உயரிய விலை ஒன்றை அளித்து வாங்கலாம். இந்த இசைத்தொகுப்பு ஒரே ஒரு நகல் மட்டுமே இருக்கும். அதிக தொகையில் ஏலம் எடுப்பவருக்கு அது சொந்தமாகிவிடும். அவரிடம் மட்டுமே அந்த நகல் இருக்கும், எங்கும் அது வெளிவராது. இந்த ஏலம் 2021 ஜூன் மாதம் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.” என்றார்.
ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...
இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...
‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...